Home / Astrology / அடடா! நீங்க இந்த ராசியா? அப்போ உங்களுக்கு இன்னைக்கு இப்படித்தான் இருக்கும்…

அடடா! நீங்க இந்த ராசியா? அப்போ உங்களுக்கு இன்னைக்கு இப்படித்தான் இருக்கும்…

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

தேவையில்லாத வீண் செலவுகள் வந்து, உங்களுடைய செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். வேலையிடங்களில், பணிகளில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் மிக நீண்ட உயரத்துக்குச் செல்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது மிக நல்லது. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 7ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அமையும்.

ரிஷபம்

தொழில் ரீதியான அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். தொழில் சம்பந்தமாக சுப செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு தொழில் ரீதியாக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதன்மூலம் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த பணக்கஷ்டங்கள் தீரும். அரசு சார்பில் நீங்கள் எதிர்பார்த்திருந்த அனுகூலமான பலன்கள் தானாகத் தேடி வரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 3ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும். தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஏன் வாயையே திறக்காமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது.

மிதுனம்

நினைத்த காரியங்கள் ஈடேறும் நாளாக இருக்கும். பெரிய மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். உங்களுடைய வாக்குத் திறமையால் பாராட்டுக்கள் வந்து குவியும். உங்களுடைய நேர்மையைக் கண்டு பொறாமைப்படாதவர்களே இருக்க மாட்டார்கள். புண்ணிய காரியங்களில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் வந்துசேரும். வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய அதிாஷ்ட எண் 9. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை வடக்காகவும் அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கடகம்

பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய இடங்களில் சபை தலைவாக அங்கீகரிக்கப்படுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் அதனால் நிறைய பலன்களும் உண்டாகும். மனைவியின் வழியில் தேவையில்லாத சுப விரயங்கள் உங்கள் தலையில் வந்து விழும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக இருக்கப்போவது 5 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சையும் இருக்கப் போகிறது.

சிம்மம்

தொழில் ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த நபர்களிடமிருந்து உதவிகள் வந்துசேரும். இதுவரை இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். மாணவர்களுக்கு கொஞ்சம் சோதனையான நாளாகத்தான் இருக்கும். போட்டிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்கலாம். வெற்றி வாய்ப்புகள் தள்ளிப்போகும் சூழல் உருவாகும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். உங்களுக்கு இன்றைய அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட எண் 1, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

கன்னி

நீங்கள் வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். வாகனங்கள் மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நினைத்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.மனதில் வந்துபோன தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, ஒரு தீர்வு உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். புதிய ஆடை, ஆபரண்ஙகள் வாங்கிக் குவிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை, அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட திசை தெற்கு.

துலாம்

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை சார்ந்து தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயுள்ள பிரச்னைகள் குறைந்து உறவுகள் மேலோங்கும். கடன்கள் பெருகும். தனால் மனவருத்தம் அதிகரிக்கவே செய்யும். எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமான சூழலைப் பெற்றுத் தரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளையும் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் இருக்கிறது.

விருச்சிகம்

நண்பர்கள் மூலம் பொருளாதார லாபம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு பெருகும். பொது விஷயங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு சாதகமான நாளாக அமையும். மதிப்பு மிக்க பதவிகள் கிடைக்கும். அதனால் உங்களுடைய மதிப்புகள் உயரும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பாகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கும்.

தனுசு

புதிய வீடு, மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை பணியில் இருந்து வந்த மந்தத் தன்மை காரணமாக, அவச்சொல் ஏற்பட வாய்ப்புண்டு. பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் நினைத்ததைவிட, அதிக பலன்களையே தரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக, கிளிப்பச்சையும் இருக்கும்.

மகரம்

பிரபல நபர்களின் அமோக ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீண் அலைச்சல்களின் காரணமாக, உடல் சோர்வு உண்டாகும். விவாதங்களில் உங்களில் திறமையால் வெற்றி பெறுவீர்கள். ஈடுபடும் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வீர்கள். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களால் உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 4 ம், அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக கிழக்கும் அதிர்ஷ்டத்துக்குரிய நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு அமோக லாபம் உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான பிரச்னைகள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்புக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழில் ரீதியான பணங்களை மேற்கொள்வீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 3, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் சந்தன வெள்ளை.

மீனம்

உற்றார், உறவினர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்வீர்கள். பணியில் உயர்வு அடைவீர்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் அடைவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து, பார்ட்டி, கொண்டாட்டம் என கேளிக்கைகளில் ஈடுபட்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். செய்யும் தொழிலில் என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தினால் மேன்மை உண்டாகுமோ அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக லாபத்தை அடைவீர்கள். உங்களுக்கு இன்றைக்கு அதிர்ஷ்டமான திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 8 ம், அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

Open