Home / Tamil News / பெண்களைத் தேடி காமதிபுரா சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்!

பெண்களைத் தேடி காமதிபுரா சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்!

பெண்களை அடிமைகளாய் நடத்தும் போக்கு எல்லாம் மாறிவிட்டது இங்கே அப்படியான வழக்கம் எல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியளிக்கிறது இந்த செய்தி. சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் ராயட்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் 193 நாடுகளில் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடு என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பத்து நாடுகளின் பட்டியல் வெளியானது. இதில் முதலிடத்தை பிடித்திருப்பது இந்தியா! இந்த ஆய்வின் முடிவு குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதே போன்ற ஒரு ஆய்வு கடந்த 2013 ஆம் ஆண்டு இதே நிறுவனம் வெளியிட்டது அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

2013 ஆம் ஆண்டு ஆய்வின் முடிவுப்படி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடம் பிடித்திருந்தது. இப்போது முதலிடத்தில் இருக்கிறது.

#1 ஆசியாவின் தெற்கு பகுதிகளில் உள்ள நாடுகளை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் தான் அதிக மனித கடத்தல் நடக்கிறதாம். இந்தியாவில் மட்டும் இருபது லட்சத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பதினாரு மில்லியன் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான்.

வாழ்விடம் இன்றி வேறு போக்கிடம் இல்லாமல் வறுமையினால் கொண்டு வந்து விடப்படுகிற குழந்தைகள், கடத்திக் கொண்டு வரப்படுகிற பெண்கள் என ஒவ்வொருவரும் வலி நிறைந்த கதைகளுடன் தான் அங்கே சிக்கிக்க் கிடக்கிறார்கள்

#2 இவர்களை குறிப்பாக இங்கே சிக்கித் தவிக்கும் குழந்தைகளை மீட்க வேண்டும் என்று பத்திரிகையாளர் திரிவேனி மற்றும் பாலகிருஷ்ண ஆச்சார்யா ஆகியோர் நடத்தியிருக்கிறார்கள். இதன் ஆரம்ப புள்ளி எதனால் அங்கிருக்கும் குழந்தைகளை மீட்க வேண்டும் அதோடு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று தோன்றிய கதையை விவரிக்கிறார் திரிவேணி.

#3 1993 ஆம் ஆண்டு நான் பத்திரிகையாளராக வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது திடீரென்று மும்பையில் இருக்கிற காமதிபுரா என்ற சிகப்பு விளக்கு பகுதிக்கு நடிகர் சுனில் தத் வருகிறார் அவர் அந்த பெண்களிடத்தில் ராக்கி கட்டிக் கொள்ளப்போகிறார் என்ற வதந்தி கிளம்பியது.

தூர்தஷன் செய்தி நிறுவனத்திற்காக அதனை கவர் செய்யச் சொல்லி என்னை அனுப்பியிருந்தார்கள். உடனேயே கிளம்பிவிட்டார் திரிவேணி.

#4 அங்கே சென்ற பிறகு செய்தி வெளியான அடுத்த பத்தாவது நிமிடத்தில் இவ்வளவு கூட்டமா என்று நினைத்துக் கொண்டாராம். ஆனால் அதன் பிறகு அந்த பகுதி எப்போதுமே இப்படி கூட்டமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்.

மரத்திலான தடுப்புகளை வைத்துமிகச்சிறிய பெட்டி வடிவிலான அறையை உருவாக்கியிருந்தார்கள். வயது வித்யாசமின்றி எல்லா வயதுப் பெண்கள் அரைகுறை ஆடையுடன் அதீத மேக்கப்புடன் நின்றிருந்தார்கள். நான் கடந்து செல்லும் வழியில் மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் நின்றிருந்தார்கள்.

#5 இங்கே பாலியல் தொழில் செய்யும் பெண்களின் குழந்தைகளாய் இருக்கக்கூடும் என்று நினைத்து அவர்களிடம் அம்மா வருவார் இங்கே எல்லாம் நீங்கள் வரக்கூடாது எங்க தங்கியிருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த குழந்தைகள், எங்க அம்மா இங்க இல்ல எங்கள இங்க கடத்திட்டு வந்துட்டாங்க அம்மாக்கிட்ட போகணும் என்று சொல்லி அழுதிருக்கிறார்கள் அப்போது தான் இந்த குழந்தைகளும் பாலியல் தொழிலுக்காக கடத்தி அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

#6 அந்த குழந்தைகளிடம் அவர்களின் வீடு, பெற்றோரு குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைக்கலாம் என்ற எண்ணத்தில் அது குறித்து விசாரித்தேன். எங்களை நேப்பாளிலிருந்து இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள் தொடர்ந்து அவர்களுடன் நான் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஒரு மூத்த பெண்மணி சத்தமிட்டு குழந்தைகளை உள்ளே போகச் சொன்னார்.

குழந்தைகள் சட்டென ஓடி ஒளிந்து கொண்டன.

#7 அதன் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த குழந்தைகளை பார்க்க முடியவில்லை. சுனில் தத் குறித்த செய்தி வெறும் வதந்தி தான் என்று தெரிந்த பிறகு அங்கிருந்து திரும்பிவிட்டார். பல ஆண்டுகள் கழித்து தன் கணவரின் கடையில் பணியாற்றும் ஒரு நபர் தான் ஒரு பாலியல் தொழிலாளியை காதலிப்பதாகவும் அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதாகவும் ஆனால் அவளை அங்கிருந்து அனுப்ப மறுக்கிறார்கள் என்றிருக்கிறார்.

திரிவேணியும் அவரது கணவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை அங்கிருந்து மீட்டு திருமணத்தை நடத்தி வைக்க நினைத்திருக்கிறார்கள்.

#8 அந்தப் பணியாளரின் காதலி இருக்கிற இடத்திற்கு வந்து விட்டார்கள். அங்கிருந்து அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல முனைந்த போது அங்கிருந்த மற்ற பதினைந்து பெண்கள் வரை எங்களையும் இங்கிருந்து எப்படியாவது அழைத்துச் சென்று விடுங்கள் நாங்கள் இங்கே இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அழுதிருக்கிறார்கள்.

அங்கே பெரிய கலாட்டா எல்லாம் முடிந்து அவர்கள் அனைவரையும் அழைத்து வந்துவிட்டார்கள். போலீஸ் உதவியுடன் சில பெண்களின் பெற்றோரை கண்டுபிடித்து ஒப்படைத்தார்கள். சில பெண்களின் பெற்றோரை கண்டுபிடித்தாலும அவர்கள் இந்தப் பெண்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள்.

#9 இதனால் அந்தப் பெண்களுக்காகவும் இன்னும் பாலியல் அடிமைகளாக கிடக்கும் பெண்களை மீட்டு புதிய வாழ்வு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மறுவாழ்வு மையத்தை ஆரம்பித்திருக்கிறார். மனைவியின் இந்த முயற்சிக்கு கணவர் பாலகிருஷ்ணா ஆச்சார்யா முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.

பாலகிருஷ்ணா தன்னுடைய பிஸ்னஸை விட்டுவிட்டு பிற தன்னார்வலர்களுடன் இணைந்து இப்படி பாலியல் தொழிலில் அடைப்பட்டு கிடக்கும் பெண்களை மீட்டு அழைத்து வந்தார்கள்.

#10 இவர்களின் இந்த முயற்சி ஆரம்பத்தில் கவனிக்கப்படாமல் பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாய் இருந்தது. ஒரு கட்டத்தில் மக்களுக்கு இது குறித்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியவர பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். மீட்டு அழைத்து வரும் பெண்களை தங்க வைக்க ஏழு மாடி கொண்ட கட்டிடம் கிடைத்தது.

சில நேரங்களில் பணத்தால் எதிர் தரப்பு ஜெயிக்கவும் செய்தார்கள் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காமல் கணவனும் மனைவியுமாய் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள்.

#11 2005 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா ஒரு விபத்தில் உயிரிழந்துவிட இப்போது திரிவேணி மட்டும் இப்போது தன்னுடைய பாதுகாப்பையும், இந்த பெண்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இது அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை . தொடர்ந்து போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் மிரட்டப்படுகிறார். இதற்கு முன்பு கணவர் உயிருடன் இருக்கும் போதும் இப்படியான மிரட்டல்கள் எங்களுக்கு அதிகமாக வரும். எனக்கென்னவோ என் கணவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று தோன்றவில்லை வேண்டுமென்றே திட்டமிட்டு அவரை கொலை செய்யும் நோகத்தில் இதனை நடத்தியிருப்பதாக உணர்கிறேன் என்கிறார்.

#12 இதைப் பார்த்து எல்லாம் திரிவேணி பயந்து தான் எடுத்த முயற்சிகளிலிருந்து விலகிடவில்லை. தொடர்ந்து போராடினார். இன்றைக்கு இந்த தொண்டு நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோர் முழு நேரமாக பணியாற்றுகிறார்கள். பல்வேறு இடங்களில் இப்படி பெண்கள் கடத்தப்படுவதாக அல்லது சித்திரவதை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்க இன்ஃபார்மர்கள் இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங், மருத்துவ உதவி எல்லாம் வழங்க மருத்துவக் குழு தயாராய் இருக்கிறது. எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டவருக்கு கூட சிகிச்சை அளிக்கப்படுகிறது. மும்பை மட்டுமல்லாது பூனே , தில்லியிலும் என நான்கு கிளைகளை திறந்துவிட்டார். இவரது உழைப்பையும், முயற்சியையும் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறன. இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு வந்திருக்கிறார்.

Check Also

பலர் முன்னிலையில் பெண் பயணியிடம் தவறாக நடந்த காவலர் பின்பு நடந்ததைப் பாருங்கள்!

பலர் முன்னிலையில் பெண் பயணியிடம் தவறாக நடந்த காவலர் பின்பு நடந்ததைப் பாருங்கள்!

Open